Vishal said Appreciation ceremony for Vijayakanth will happen after finishing nadigar sangam building

Advertisment

விஷால், தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cedccb32-8ccb-482a-b884-8e22b8343e0e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_49.jpg" />

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த போது சமீபத்தில் லாரி மோதி விபத்து நடந்தது. பின்பு லைட் கம்பம் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை விபத்துகள் நடந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவித்த படக்குழு விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விஷால், நடிகர் சங்க கட்டடம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், "நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை விஜயகாந்த் தான் முதலில் மீட்டுக் கொடுத்தார். இன்னும் ஓராண்டுக்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். பின்பு விஜயகாந்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்" என்றார் .